search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னை மரம்"

    • கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும்.
    • மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும்.

    மடத்துக்குளம்,

    திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. மாவட்டத்தில் 62 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக, தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.கருந்தலை புழு, அனைத்து வயது தென்னை மரத்தையும் தாக்கக்கூடியது. இப்புழு ஆயிரக்கணக்கில் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை உருவாக்கி, இலையில் உள்ள பச்சையத்தை உறிஞ்சுவதால் இலைகள், தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல் காணப்படும்.

    கருந்தலை புழு தாக்கிய தென்னை மட்டைகளை வெட்டி அதனை அகற்றி, தீ வைத்து அழிக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்த பெத்தலிட், பிரக்கோனிட் ஆகிய ஒட்டுண்ணிகளை தோப்புகளில் விட வேண்டும்.மேற்படி ஒட்டுண்ணிகள் ஹெக்டருக்கு 3 ஆயிரம் என்ற அளவில் தாக்குதல் உள்ள இடத்தில் தென்னந்தோப்புகளில் விட வேண்டும். தாக்குதல் அதிகமாக இருந்தால் ஓலையின் அடிப்பகுதியில் நன்கு படுமாறு, டைக்குளோர்வாஸ் (100 ஈசி) 0.02 சதவீதம் அல்லது மாலத்தீயான் (50 ஈசி) 0.05 சதவீதம் (1 மி.லி.,) இதில் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.இதனைக் கட்டுப்படுத்த வேர் வழியாக பூச்சி மருந்து செலுத்தலாம். பூச்சி மருந்து செலுத்தி ஒரு மாத காலத்திற்கு காய்களையோ, இளநீரையோ உபயோகப்படுத்தக்கூடாது.

    மருந்து தெளிப்பதற்கு முன்பாக முற்றிய காய்களை பறித்து விட வேண்டும். மோனோகுரோட்டோபாஸ் 36 சதவீதம், எஸ்.எல்., என்ற பூச்சி மருந்தை மரம் ஒன்றுக்கு 10 மி.லி., உடன் 10 மி.லி., தண்ணீர் கலந்து வேர் வழியாக செலுத்த வேண்டும்.மேலும் ஆலோசனைகளுக்கு, ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம் 89407 03385 மற்றும் அருகிலுள்ள உள்ள வேளாண் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். ஒட்டுண்ணிகள், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பரமத்தி அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே பிள்ளை களத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), விவசாயி.

    இவரது தோட்டத்தில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தென்னை மரத்தில் விழுந்ததால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    ×